Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வார இறுதியில் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பதாக இன்று புதன்கிழமை ஈரான் உறுதிப் படுத்தியுள்ளது.

மேலும் 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் அது மேற்கொண்டிருந்த JCPOA அல்லது 2231 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி அது நடத்தப் படவில்லை எனவும் முற்றிலும் ஈரானின் பாதுகாப்பு வல்லமையை அதிகரிக்கச் செய்வதற்காகவே என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் இந்த ஏவுகணைப் பரிசோதனை ஏற்றுக் கொள்ளப் பட முடியாத ஒன்று என வாஷிங்டன் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்புச் சபையிலும் இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை அவசர ஒன்று கூடல் ஒன்று நிகழ்த்தப் பட்டது. இதை அடுத்தே ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹொஸ்ஸெயின்  டெஹ்கான் மேற்குறித்த கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய ஏவுகணைப் பரிசோதனை செய்த முதலாவது நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எமது பாதுகாப்பு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தாம் விரும்பவில்லை எனவும் இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் முற்றிலும் பாதுகாப்புக்காகவே அன்றி அணுவாயுதங்களைத் தாங்கிச் செல்வதற்காக அல்ல என்ன ஈரான் மேலும் வலியுறுத்தியுள்ளது. கடந்த வருடம் ஜனவரியில் மேற்குலகுடன் ஈரான் மேற்கொண்ட அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து அதன் மீதான சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகள் பல நீக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுமார் 2000 Km தூரம் வரை சென்று இஸ்ரேலையோ மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையோ தாக்கக் கூடிய வல்லமை கொண்ட ஏவுகணைகளை ஈரான் வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து பொது மக்களோ அகதிகளோ வர டொனால்ட் டிரம்ப் தடை விதித்த நாடுகளின் பட்டியலில் ஈரான் உள்ள நிலையில் இந்த ஏவுகணை விவகாரத்தை மத்திய கிழக்கில் எரிபொருள் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு வாஷிங்டன் பயன்படுத்தக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது.

இதேவேளை ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானி அரசியல் உலகத்தில் மிக மிகக் குறைந்த அனுபவம் உள்ள ஒரு தலைவராக டொனால்ட் டிரம்ப் விளங்குவதாகவும் இதுவரை காலம் இன்னொரு உலகத்தில் வாழ்ந்து வந்த அவர் தற்போது தான் அரசியல் உலகத்துக்குள் நுழைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பேர்லின் சுவர் எப்பதோ தகர்க்கப் பட்டு விட்டதாகவும் உலகில் பல நாடுகளில் இப்போது அனைத்துத் தரப்பு மக்களையும் மதத்தினரையும் அரவணைக்கும் ஜனநாயகமே கோலோச்சி இருப்பதையும் அவர் உணர வேண்டும் எனவும் றௌஹானி சுட்டிக் காட்டியுள்ளார்.

0 Responses to கண்டம் விட்டு கண்டப் பாயக் கூடிய ஏவுகணையைப் பரிசோதனை செய்த ஈரான்!: அமெரிக்கா கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com