தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற விடயம், அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சித்ததாகத் தெரிவித்து முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்ற விடயம் தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “சுமந்திரன் கொலை முயற்சி தொடர்பான நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், அதன்பின்னரான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் பாராளுமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து ஒரு நிலைப்பாட்டிற்கு வராமல், என்ன நடந்தது என்பது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஒன்று உள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை. அவ்வாறான எண்ணம் உடையவர்கள் எவராக இருந்தாலும் அதற்கு இடமளிக்கமாட்டோம். கட்சி தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன்.
சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் என புலனாய்வு பிரிவினர் சொல்கின்றார்கள். அரசியல் தேவைக்காக அவ்வாறு செய்ய முடியும். முன்னாள் போராளிகளை கைதுசெய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த முன்னாள் போராளிகள் வாழ வழியில்லாமல் தள்ளாடிக்கொண்டிருப்பவர்களிடம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர்களை மீண்டும் போராட்டங்களுக்குள் தள்ள வேண்டாம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ பொறுப்புவாய்ந்த பதிலை கூறவேண்டும்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்து வாழ வழியில்லாமல் இருப்பவர்கள், அவ்வாறான சிந்தனை இல்லாமல் இருப்பவர்களை பிடித்து பிரச்சினை கொடுத்தால், இன்னும் 5 வருடங்கள் அல்லது 10 வருடங்களிற்குள் போராட்டம் வெடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அவ்வாறான நிலைமைக்கு முன்னாள் போராளிகளை தள்ள வேண்டாம். ஒன்றுமே வேண்டாம் என இருக்கும் மக்களை தூண்ட வேண்டாம்.” என்றுள்ளார்.

0 Responses to ‘சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்’ என்ற விடயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்: சிவாஜிலிங்கம்