நாட்டில் நீடித்த கொடும் யுத்தத்தில் உயிர்ச் சேரதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என்று அனைத்தையும் இழந்து நின்றாலும் தமிழ் மக்கள், வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போன்று தலை தூக்கி நிற்கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கணணி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே அதற்குக் காரணம்.
அன்பார்ந்த மாணவ மாணவியரே! நீங்கள் அனைவரும் கல்வி நடவடிக்கைகளில் சிறப்புறத் திகழ வேண்டும். அதற்கு அல்லும் பகலும் நீங்கள் பாடுபட வேண்டும். உங்களுக்குக் கல்வி போதிக்கின்ற ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடன் உங்களுக்குக் கற்றுத் தந்ததாலேயே நீங்கள் இன்று நல்ல நிலையை அடைந்துள்ளீர்கள்.
உங்கள் ஆசிரியர்களை ஆசிரியைகளை எந்தக் காலத்திலும் மறவாதீர்கள். உங்கள் கற்பித்தல் முறைமையானது வெறும் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நிகழ்வாக அமையாது அறிவுத் தேடலாகவும் அதற்கு உதவுகின்ற வழிமுறையாகவும் அமைய வேண்டும் என ஆசைப் படுகின்றேன்.
தென்னிந்தியாவிலோ இலங்கையிலோ சட்டத்தை தமிழில் முதன் முதலில் கற்பித்த ஆசிரியன் நான். 1971ஆம் ஆண்டில் அக்கைங்கரியத்தில் ஈடுபட்டேன். சட்டப் பரீட்சைகளில் என்னுடைய மாணவ மாணவியர் என் விரிவுரைகளை மட்டுமே பாவித்தார்கள். ஆனால் சற்று வெளியே சென்று ஆங்கில நூல்களையும் படித்த மாணவ மாணவியர் பரீட்சைகளில் மிக நன்றாக சித்தி அடைந்தார்கள்.
ஆகவே மேலதிக வாசிப்பானது பரீட்சைகளில் நன்றாகச் செய்ய அத்தியாவசியமானது. மாணவச் செல்வங்களே! “கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்” என்பார்கள். உங்கள் பாடப் புத்தகங்களுக்குத் தொடர்புடைய மேலதிக வாசிப்புக்களை மறந்து விடாதீர்கள்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்கள் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள்: விக்னேஸ்வரன்