ஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்
அளித்துள்ளதால், இன்னமும் எண்ணிக்கை அதிகரிக்குமா என்கிற கேள்வி
எழுந்துள்ளது.
கமிஷ்னர் ஜார்ஜ் மீது 100 க்கு மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்
அளித்துள்ளனர்.எழும்பூர், சந்தோஷ் நகரை சேர்ந்த ஜெகதாம்மாள்,
முனியம்மாள், பத்மாவதி, செல்வி உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள்,
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஒரு புகார் மனுவை
கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடந்தது. கடந்த
23-ந்தேதி இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், போலீசாரும்,
போராட்டக்காரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதை நாங்கள் டி.வி.யில் பார்த்தோம். ஆனால், இந்த வன்முறையில் எங்கள்
பகுதியை சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை. ஆனால், கடந்த 24 மற்றும்
25-ந்தேதிகளில் இரவு 1 மணிக்கு எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையில்
போலீசார் எங்கள் பகுதிக்குள் வந்தனர்.
அதிகாலை வரை ஒவ்வொரு வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, தூங்கிக்
கொண்டிருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள்
ஆகியோரை அடித்து உதைத்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். ஆனால்
கலவரத்தில் வாகனங்களை நாங்கள் தான் எரித்தோம் என்று மிரட்டி எழுதி
வாங்கிக் கொண்டனர்.
பின்னர் மாணவர்கள், இளைஞர்களை அடித்து உதைத்து, எலும்புகளை
உடைக்கின்றனர். பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.
இப்போது, ஒவ்வொரு வீடாக வந்து இளைஞர்கள், இளம்பெண்களை போலீஸ்
நிலையத்துக்கு வரச் சொல்கின்றனர். நாங்கள் போனதும், குற்றத்தை ஒப்புக்
கொள்வதாக எழுதிக் கேட்கின்றனர்.
நாங்கள் எதுவும் செய்யவில்லை. கலவரத்தில் ஈடுபடவில்லை. இப்படி எழுதி
வாங்கினால், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலம் வீணாகி விடும் என்று
போலீசாரிடம் கெஞ்சிக் கேட்டோம். அதற்கு அந்த போலீஸ் அதிகாரிகள் அசிங்கமான
வார்த்தைகளால் திட்டுகின்றனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சொல்லித்தான்
அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக இன்ஸ்பெக்டர் சேட்டு கூறுகிறார்.
மனித உரிமைகளை மீறி எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யும் போலீஸ்
கமிஷனர் ஜார்ஜ், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்.என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 Responses to கமிஷ்னர் ஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்