Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸின் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
11 வேட்பாளர்கள் போட்டியிட்ட இச்சுற்றில், அதிக வாக்குகளை பெற்ற முதலிரு வேட்பாளர்களான எமானுவெல் மாக்ரொன் மற்றும் மெரின் லெ பென் ஆகிய இருவரும் இறுதிச் சுற்று வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்திய/வலது சாரி கோட்பாடுடைய வேட்பாளரான எமானுவெல் மாக்ரொன், பிரன்ஸுவாஸ் ஹாலந்து ஆட்சியில் பொருளாதாரம்/கைத்தொழில் அமைச்சராக இருந்தவர். ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அரசிலிருந்து விலகி «On Marche»  எனும் பெயரில் புதிய கட்சி தொடங்கியிருந்தார். முதல் சுற்று வாக்கெடுப்பில் சுமார் 23.24% வீத மக்கள் வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

தீவர வலது சாரி கோட்பாடுடைய மெரின் லெ பென் 22.79% வீத வாக்குகளை பெற்று முதல் சுற்று வாக்கெடுப்பில் இரண்டாம் நிலையில் உள்ளார். இவர்  அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ஒப்பிட்டு பார்க்கப்படுபவர்.

இவருடைய பிரதான பிரச்சாரக் கொள்கைகளாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகல், பிரெஞ்சுக் காரர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை,  சட்டவிரோத குடியேறிகளை உடன் நாடுகடத்தல், சட்டரீதியிலான குடியேறிகளை வருடத்திற்கு 10,000 எனும் அளவில் கட்டுப்படுத்தல், இஸ்லாமிய «கடும்போக்கு» மத தேவாலயங்களை மூடுதல், சமூக வீட்டுகுடியிருப்பு திட்டத்தில் பிரெஞ்சு இனத்தவருக்கு முன்னுரிமை கொடுத்தல், ஓய்வு பெறும் வயதை 60 ஆக நிர்ணயித்தல் என்பவை உள்ளன.

பிரான்ஸில் வாழும் வேற்றினத்தவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் மீதான கடும்போக்குவாதம் ஆளுமை பெறுவதாக சமூக ஆர்வலர்கள் கவலையடைகின்றனர். மெரின் லெ பென் மற்றும் எமானுவெல் மாக்ரொன் ஆகிய இருவரில் ஒருவரே இன்னமும் 15 நாட்களுக்குள் பிரான்ஸின் அடுத்த ஐந்தாண்டுக்கான பிரதமராக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

ஆனால் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதல் சுற்று முடிவுகள், பிரான்ஸிலும் தீவிர வலது சாரிக் கட்சிகளின் ஆளுமையை வெளிப்படுத்தியிருப்பது ஐரோப்பிய பல்லின மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 வருட பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு இரு மத்திய/வலதுசாரிக் கொளைகள் உடைய அரசியல்வாதிகள் தெரிவாகியுள்ளனர். கடந்த வருடங்களில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு இடதுசாரி வேட்பாளர் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தார்.

இம்முறைத் தேர்தலில் போட்டியிட்ட மத்திய வலது சாரி வேட்பாளரான பிரன்ஸுவாஸ் ஃபிலொன் 19.75% வீத வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார்.  தீவிர இடதுசாரி வேட்பாளரான மெலென்ஷோன் 18.92% வீத வாக்குகளை பெற்று நான்காம் இடத்தை பெற்றார்.

பிரான்ஸின் இறுதிச் சுற்று அதிபர் தேர்தல் எதிர்வரும் மே 7ம் திகதி நடைபெறுகிறது.

0 Responses to பிரான்ஸின் அடுத்த பிரதமர் யார்? : மத்திய மற்றும் தீவிர வலது சாரி வேட்பாளர்கள் முன்னிலையில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com