Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், போலீஸின் துரித விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்ட செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. நள்ளிரவில் பல வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா என்று தெரிந்தே, அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களைத் தடுத்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பல சூட்கேஸ்களில் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆவணங்களை அள்ளிச் சென்றது யார், அவர்கள் வேறு எதாவது காரணங்களுக்காக அத்துமீறி உள்ளே நுழைந்தார்களா, அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்று பல்வேறு சந்தேகங்களை ஊடகங்கள் எழுப்பியிருக்கின்றன.

போலீஸ் துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா என்ற கேள்விகள் எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கிறது. தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், இந்தக் கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், தமிழக அரசுக்கு இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Responses to கொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரணை வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com