தாயும் தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக தற்போது உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல தனித்துவிடப்பட்டுள்ளோம். அதிமுக இணைய வேண்டும் என இரு அணி தலைவர்களும் விரும்புகிறார்கள். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக ஒன்றாக செயல்படும்.” என்றுள்ளார்.
0 Responses to தாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ராஜூ