Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் கொள்ளை வழக்கில் திடீர்
திருப்பமாக, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில்
கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள், அங்கு காவல் காத்துக்கொண்டு இருந்த
காவலாளி ஒருவரை கொலை செய்துள்ளனர். மற்றும் ஒரு காவலாளியை பலமாகத் தாக்கி
உள்ளனர்.பங்காளவில் நுழைந்த கொள்ளைக்காரர்கள் கணக்கிலடங்கா நகைகள்,
பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், போலீசார்
எதையும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கேரளாவில் மூன்று பேரை போலீசார்
விசாரித்து வருகின்றனர். என்றாலும், இவர்கள் யாரையும் போலீசார் இதுவரை
கைது செய்யவில்லை இந்நிலையில், கொடநாடு பங்களாவின் ஜெயலலிதாவின் கார்
ஓட்டுனரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த ஓட்டுநர் இன்று
அதிகாலை சேலம் மாவட்டம் ஆத்தூர் சாலையில் இறந்து கிடந்துள்ளார்.

இவர் வாகன விபத்தில் இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தாலும், இவரை
எண்கவுண்டர் செய்துள்ளனர் ஆத்தூர் போலீசார் என்றும் ஒரு தகவல் பரவலாக
பேசப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஓட்டுநர் எந்த வாகனத்தில் எப்போது எப்படி
அடிப்பட்டு இறந்தார் என்கிற தகவலைத் தர ஆத்தூர் போலீசார் மறுத்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து மர்மங்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்:கார் ஓட்டுநர் மர்ம மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com