தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டங்கள் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வருடத்தின் மே தினமாகும். தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி மே தினக் கூட்டங்கள் நடைபெறும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்கால அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி, மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் மே தினக் கூட்டங்கள் இம்முறை கிளிநொச்சியிலும் அம்பாறையிலும்!