கிளிநொச்சி மாவட்டத்தில் வயல்களில் குழாய்க் கிணறு அமைத்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி வயல்களில் குழாய்க் கிணறு அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு மானிய உரம் மற்றும் நீர்ப்பங்குகளை உடனடியாக நிறுத்துவதற்கும் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அவர் குறித்த உத்தரவினை விடுத்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளதாவது, “கிளிநொச்சி மாவட்டத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பது அனைவரது பொறுப்புமாகும். அதிலும், விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிணற்று நீரில் மரக்கறிச் செய்கையில் ஈடுபடலாம். ஆனால், பெரும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பலரும் குழாய்க் கிணறுகளை அமைத்து விவசாயம் பண்ணுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அனுமதியளிக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to கிளிநொச்சியில் குழாய்க் கிணறு அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை!