Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தினகரன் திஹார் சிறையில் மொத்தமுள்ள 9 பிளாக்குகளில் 7ஆவது பிளாக்கில்
அடைக்கப் பட்டிருக்கிறார்.என்று தெரிய வருகிறது.

இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்
தரகர் சுகேஷ் என்பவரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, டெல்லி போலீசாரால்
கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மே 1ஆம் தேதி டெல்லி திகார் சிறையில்
அடைக்கப்பட்டார்.

தினசரி தலைப்பு செய்தியாகவே வலம் வந்த தினகரன் சிறைக்கு சென்ற பிறகு,
அவர் குறித்த பேச்சுகள் அடங்கிவிட்டன. இப்போது இருக்கும் நிலையில்
தினகரன் குறித்த எந்தவித பேச்சுகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது

திகாரில் அடைக்கப்பட்ட தினகரன் மொத்தமுள்ள 9 பிளாக்குகளில் 7ஆவது
பிளாக்கில் அடைக்கப் பட்டிருக்கிறார். அவரது வார்டில் மொத்தம் 800
கைதிகளுக்கு மேல் அடைக்க வசதி இருக்கிறது. ஆனால் இப்போது 300க்கும்
குறைவான நபர்களே இருக்கிறார்கள். அதில் விசாரணை கைதிகள்தான் அதிகம்
இருக்கிறார்கள். அவரது வார்டில் நைஜீரியா, நேபாளம், பங்களாதேஷ்,
ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கைதிகளும் சிலர் இருக்கிறார்கள்.

முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு உயிருக்கு பாதுகாப்பு
வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியதால் கடத்தல், ரேப், கூட்டு சதி,
திருட்டு, ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை அடைக்கும்
சிறைக்கு அருகில் அடைத்துள்ளனர். ஆதலால் தினகரனுக்கு எந்தவித
அச்சுறுத்தலுமில்லை. வருமான வரி கட்டியதால் உயர் வகுப்பான 'ஜி ' பிரிவில்
தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தினசரி நன்றாக தூங்குகிறார். சிறையில் கொடுக்கப்படும் உணவுகளை உண்ணாமல்
பழம், பிஸ்கட், திராட்சை, பயறு வகைகளை உண்டு வருகிறார். மதியம் இரவு
வேளைகளில் சப்பாத்தியும், ரொட்டியும் அவருக்கு உணவாக வழங்கப்படும். சில
நேரங்களில் அதைதான் உண்டு வருவதாக தகவல் வருகிறது. திகார் சிறையில் வேலை
பார்க்கும் சில தமிழ் போலீஸ் அதிகாரிகளும், பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள்
இருவரும் தினகரனுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இதுபோக
அடிக்கடி டெல்லியிலுள்ள மத்திய மந்திரிகள் சிலர் மறைமுகமாக தினகரனை நன்கு
கவனித்து வருகிறார்கள்.

தினகரன் இருக்கும் பிளாக்கில் சில நைஜீரிய வெளிநாட்டு கைதிகள்
இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக வேறு பிளாக்கிற்கு மாற்றவும், சிறையில்
வலுவாக இருக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு
மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார். மே மாதம் என்பதால் டெல்லியில்
வெயில் அதிகமாக இருக்கிறது. வெயிலை சமாளிக்கவும் தினகரனுக்கு ஒரு சில
உதவிகளையும் செய்து கொடுக்கிறார்கள். இதுவரை தினகரனை ஜாமீனில் எடுக்க
அவரது வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்யவில்லை. தன்னை இப்போது ஜாமீனில்
எடுக்க வேண்டாமென்று தினகரன் மறுத்துவிட்டார்.

தினகரனுக்கு சிறையில் படிக்க சில அரசியல் புத்தகங்களை அவரது நண்பர்
ஒருவர் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். இப்போது தினகரன் அந்தப்
புத்தகங்களை மட்டும் படித்து வருவதாகவும் தகவல். கடந்த மே 2ஆம் தேதி
திகார் சிறையில் கைதிகளால் தயாரித்து நடத்தப்படும் பேக்கரியை பார்வையிட
வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இப்போது அங்கு செல்ல
வேண்டாமென்று அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பகல் நேரங்களில் அமைதியாக இருக்கிறார். இப்போது பேச்சுத் துணைக்கு அவரது
நண்பர் மல்லிகாஜூர்னாவையும் ஒரே அறையில் தங்கவைக்க முயற்சிகள் நடந்து
வருகின்றன. இன்னும் திகார் சிறை தினகரனுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை.
இருந்தாலும் இப்போதைக்கு இந்த அமைதியைத்தான் தினகரனும் விரும்புகிறாராம்.

0 Responses to தினகரன் மொத்தமுள்ள 9 பிளாக்குகளில் 7ஆவது பிளாக்கில் அடைக்கப் பட்டிருக்கிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com