Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தலைமையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணியை நிறுவுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்தோடு, அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் பொறுப்போடு பொதுவெளியில் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முப்படைகளின் தலைமை அதிகாரியாக சரத் பொன்சேகாவை மீண்டும் நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அதனையடுத்து, சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, “அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் போது மக்களுக்கான அத்தியாவசிய தேவையை முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்புக்களையும் உள்ளடக்கிய செயலணி நிறுவப்பட வேண்டியுள்ளது. இது, கட்சிகளைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கூட்டரசாங்கத்தையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to பொன்சேகா தலைமையில் அத்தியாவசிய சேவைகள் செயலணி: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com