Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரைவு விதிகள் நாளை வெளியீடு செய்ய அமைச்சரவையில் ஓப்புதல் வழங்கப்பட்டது
இந்த வரையறை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பத்திரப்பதிவுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யாதுரை அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை வரைமுறைபடுத்தும் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த திட்டத்தின் முழுவடிவிலான அரசாணையை தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் தேவை என்று அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார்.

அரசின் கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள் நாளை வழக்கை ஒத்திவைத்தார். அது வரை அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பத்திரபதிவிற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 Responses to வீட்டுமனை வரையறை: தமிழக அரசு ஒப்புதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com