Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்களைத் தெருவில் கண்ணீர் வடிக்க விடுவதுதான் நல்லாட்சியா? என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை 74வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த வித பதிலையும் வழங்காது காலத்தை இழுத்தடித்து வருகின்றது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை எங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தும் சரணடைந்தம் இன்று எட்டு வருடங்களாகிவிட்டன.

ஆராஜக ஆட்சியில் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம் தனது நூறு நாள்வேலைத்திட்டத்தில் எங்களது உறவுகள் தொடர்பான பிரச்சனைக்குரிய பதிலை வழங்குவதாகவும் தெரிவித்த நிலையில் நாங்களும் இணைந்து தான் நல்லாட்சியை ஆதரித்தோம். ஆனால் எங்களுக்கான வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை.

இன்று 74 ஆவது நாட்களாக நாங்கள் வீதியில் கண்ணீருடன் இருந்து கொண்டிருக்கின்றோம். எங்களது கோரிக்கையை யாரும் செவி சாய்த்து எங்கள் உறவுகள் தொடர்பில் எந்தப்பதிலையும் இதுவரை வழங்கவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கம் நல்ல பதிலை தரவேண்டும் என்று நாங்கள் மான்றாட்டமாக கேட்கின்றோம். எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு தாங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா?” என்றுள்ளனர்.

0 Responses to எங்களைத் தெருவில் கண்ணீர் வடிக்க விடுவதுதான் நல்லாட்சியா?; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com