Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைவரும் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி
அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு
அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் அனைவரும் சொந்த வீட்டுடன்
இருப்பதற்காக 2016-ம் ஆண்டு மேலும் கடன் தொகையை இரட்டிப்பாக்க பல
சலுகைகளை அறிவித்துள்ளது.

எனவே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் முன்பு இருந்த விதிகளில்
இருந்து இப்போது என்ன புதிய மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது
என்றும் எப்படி விண்ணப்பிப்பது என்றும் இங்குப் பார்ப்போம்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாகவும், பொருளாதார ரீதியாக
நலிந்த பிரிவாக உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டுவதற்கான
பல சலுகைகளைப் பெறலாம்.

கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு
அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிவிடலாம். இப்போது வீடு
கட்ட சொந்தமாக இடம் வாங்கவும் திட்டங்கள் உள்ளன.

நீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர மீட்டராக இருந்தால் உங்களுடைய
வருமானம் வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதுவே 60 சதுர
மீட்டராக இருந்தால் உங்கள் வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க
வேண்டும்.

பழைய விதியில் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருந்த கடன் தொகையை உயர்த்தி
6 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

0 Responses to வாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com