Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடகாவில், பிரதமர் மோடி குறித்து தவறான தகவல் மற்றும் படத்தை
வெளியிட்ட வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினும், உறுப்பினரும் கைது
செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அட்மின்
சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகாவில், உத்தர கன்னடா மாவட்டம், டோடாபாஸ்லே பகுதியை சேர்ந்த தொழில்
அதிபர் கிருஷ்ணா சனதாமா என்பவர் ஒரு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி, அதில்
அப்பகுதியை சேர்ந்த, 40 பேரை உறுப்பினர்களாக இணைத்து இருந்தார். சில
நாட்களுக்கு முன் இந்த குழுவில், பிரதமர் மோடி குறித்து மோசமான
வாசகங்களுடன், மோடியின் படத்தை தவறான சித்தரித்தும் தகவல்கள்
வெளியிடப்பட்டன. இது குறித்து அதே குழுவில் சேர்ந்த ஆனந்த் மஞ்சுநாத்
நாயக் என்பவர் போலீசில் புகார் செய்தார்.

முருதேஸ்வர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் பந்த், இது
குறித்து வழக்கு பதிவு செய்து, வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர் பாலகிருஷ்ண
நாயக், குழு அட்மின் கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தார். இதில் உறுப்பினர்
பாலகிருஷ்ணா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். குழு அட்மின் நீதிமன்ற காவலின்
கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

0 Responses to மோடி குறித்து அவதூறு: வாட்ஸ்ஆப் அட்மின் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com