Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத
வகையில் உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் கருப்புப் பணத்தை
ஒழிக்க வேண்டும் எனப் பழைய 500, 1000 ரூபாய் மீதான தடை மற்றும் பல
முக்கிய நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் தற்போது இந்தியாவில் வருமான வரி
செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

வருவாய் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய முக்கியக்
கூட்டத்தில், கடந்த வருடத்தை விடச் சுமார் 22 சதவீதம் பேர் அதிகமாக
வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதாக வருவாய் துறை
தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல முக்கிய நடவடிக்கைகளுக்குப் பின்
தற்போது வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 1
சதவீதத்திற்கு அதிகமான அளவை எட்டியுள்ளது.

2016ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 5.28 கோடி பேர் மின்னணு முறையில்
வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பேப்பர்
வாயிலாக வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வருடத்தை
ஒப்பிடுகையில் சுமார் 22 சதவீதம் அதிகம் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com