Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

4700 ஏக்கர் காணி வலி வடக்கிலும் மற்றும் ஏனைய பகுதிகளில் 700 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளன. இராணுவம் மட்டுமன்றி, விமானப்படை மற்றும் கடற்படையினரின் வசமும் காணிகள் உள்ளன என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் முப்படையினரின் வசமுள்ள காணிகளை கையளிப்பது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இராணுவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்கள் யாழ். மாவட்டத்தில் இன்னும் எத்தனை ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கேட்ட போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.

வலி.வடக்கின் மயிலிட்டி பகுதியில் இன்று 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கலந்துரையாடல் மாவட்ட ரீதியாக நடைபெறும். இந்த கலந்துரையாடல்கள் மூலம் காணிகள் விடுவிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டு வருகின்றன.

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், அரச காணிகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தனியார் காணிகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்காலத்திலும், இவ்வாறான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு தனியார் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. இன்னும் 4700 ஏக்கர் காணி வலி வடக்கிலும் மற்றும் ஏனைய பகுதிகளில் 700 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினர் வசம் உள்ளன.

இராணுவம் மட்டுமன்றி, விமானப்படை மற்றும் கடற்படையினரின் வசமுள்ள காணிகளும் உள்ளன.

இவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இயலுமானவரை தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இன்னும் 5400 ஏக்கர் காணிகள் கையளிக்கப்படவுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் ஏனைய காணிகளையும் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

0 Responses to வலி வடக்கில் மாத்திரம் 4700 ஏக்கர் இராணுவத்தினர் வசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com