வலி.வடக்கினில் பெரும்பிரச்சாரங்களுடன் ஆட்களற்ற மயிலிட்டி இறங்குதுறையினை இலங்கை அரசு விடுவித்துள்ள நிலையினில் எதிர்பார்த்தது போன்று பெரும் ஊடக பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மயிலிட்டி இறங்குதுறை மற்றும் அருகாகவுள்ள ஆலய பகுதிகளை சேர்ந்த 54 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மக்களது குடியிருப்புக்கள் விடுவிக்கப்படுவது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதியினை சூழ உள்ள பகுதிகள் தொடர்ந்தும் கடற்படை வசமேயுள்ளதால் இனிமேல் கையளிப்பின் பின்னராக தரைவழியாக அப்பகுதிக்கு செல்ல அனுமதியில்லை.
கையளிப்பு நிகழ்வன்று கூட மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இராணுவ கண்காணிப்புடன் வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு புகைப்பட பிடிப்பு முடிந்ததும் மீண்டும் வெளியே அழைத்துவந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெறுமனே அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடல்வழியே வருகை தந்து தமது படகுகளை நிறுத்தவும் வெளியேறவும் கரையோரத்திலுள்ள பொட்டல்வெளியினில் நடமாடவுமே இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த கட்டமாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஏனைய காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சொல்லப்பட்டிருக்கின்ற போதும் உண்மையான கால எல்லை வகுக்கப்படவில்லை.
உண்மையினில் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தினில் நடைபெறவுள்ள முப்படைகள் -தமிழரசு கட்சி சந்திப்பிற்காக எம்.ஏ.சுமந்திரனின் கோரிக்கையின் பேரினில் இவ்விடுவிப்பு நாடகம் இலங்கை அரசினால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
படை வலய சூழலில் மக்களது காணிகளில் பொட்டல்தரவைகளை அங்காங்கே விடுவிப்பதன் மூலம் இராணுவ மயமான மக்கள் குடியிருப்பு திட்டத்தை அமுல்படுத்தும் அரசினது நடவடிக்கைகள் தமிழ் தரப்புக்களதும் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நடப்பதே புரியாத செய்தி சொல்லிகள் மூலமாக 27 வருடங்கள் பின்னர் விடுவிப்பென சர்வதேச மட்டதிலான பிரச்சாரமே அரங்கேற்றப்படுவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு கவலை வெளியிட்டுள்ளது.

0 Responses to மயிலிட்டிதுறைக்கு படகிலேயே போகலாமாம்!