அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை ஆதரவளிக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு திருத்தமானது பாராளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது. இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.” என்றுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா மாகாணத்தில் நேற்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரிக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்