பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் நடவடிக்கைகளோ, சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளோ அழுத்தங்களின்றி சுயாதீனமாக தொடர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையை சீர்குலைக்க எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமையை அடுத்து ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டி வருகிறதே? என ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நிறைவுற்று அதன் அறிக்கை பெற்றுக்கொள்ளும் வரை அது தொடர்பில் எவரும் எதையும் தெரிவிக்க முடியாது. அந்த அறிக்கை கிடைத்ததும் உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை எவராவது மீறி செயற்படுவாரானால் அது குற்றமென்பது சகல அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. இந்தக் கூட்டுப்பொறுப்பு மீறப்பட்ட நிலையில் தாம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளேன். கூட்டுப்பொறுப்பானது கட்சி பேதமின்றி அமைச்சரவையில் பின்பற்றப்பட வேண்டியது.” என்றுள்ளது.

0 Responses to சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் அழுத்தங்களின்றி சுயாதீனமாக தொடர வேண்டும்: மைத்திரிபால