அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை 12 வருடங்களுக்குப் பின்னர் மிக வலிமையான ஹார்வே புயல் தாக்கி வருகின்றது. வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 130 Km வேகத்தில் கரையைக் கடந்து சென்றுள்ள இந்தப் புயலால் டெக்ஸாஸ் மாநிலம் துவம்சம் ஆகியுள்ளது.
டெக்ஸாஸில் பெய்து வரும் கனமழை மற்றும் கடல் நீர் உள்ளே புகுதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஹார்வே புயலின் அச்சுறுத்தலால் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர் போன்றவற்றை அளிக்கக் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப் பட்டுள்ளது.
டெக்ஸாஸில் ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் மூடப் பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்த ஹார்வே புயலால் இன்னும் ஒருவாரத்துக்குக் கனமழை இருக்கும் என முன்னறிவிப்பு விடப்பட்டுள்ளது. மேலும் கடல் நீர் மட்டம் 13 அடி உயரம் வரை எழும்பும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் இந்த ஹார்வே புயல் காரணமாக எண்ணெய் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தியும் இயற்கை எரிவாயு உற்பத்தியும் தடைப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்து வரும் ஹார்வே புயல்