இன்று சனிக்கிழமை காலை வடகொரியா மீளவும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனால் தென்கொரியா அதிர்ச்சியடைந்துள்ள போதும் அமெரிக்கா இன்றைய சோதனையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது என அறிவித்துள்ளது.
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் அண்மைக் காலமாக கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது. மேலும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பாதுகாக்க முழுத் திறமையுடன் அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா அறிவித்ததை அடுத்துப் பதற்றம் மேலும் அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் இன்று காலை வடகொரியா காங்வான் மாகாணத்தில் இருந்து செலுத்திய ஏவுகணை 250 Km தூரம் பயணித்து கடலில் வீழ்ந்ததாகத் தென்கொரிய இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரியத் தீபகற்பம் மற்றும் தென்சீனக் கடல் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளமான குவாம் தீவுகளைக் குறிவைத்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப் பட்டிருக்கலாம் எனத் தென்கொரியா சந்தேகம் எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா வெளியிட்ட தகவலில் வடகொரியா தனது கிட்டயராங் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகளைப் பரிசோதித்ததாகவும் மூன்றுமே தோல்வியில் முடிந்ததாகம் கூறப்பட்டுள்ளது.

0 Responses to வடகொரியா மீளவும் ஏவுகணை சோதனை!: தோல்வி என்கிறது அமெரிக்கா