Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வகிக்கும் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டால் மாத்திரமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. எனினும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் என்பதே பிரதான நிபந்தனையாக உள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன முன்னணி கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் நாம் போட்டியிடுவோம்” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட்சியோடு பேச்சு: ஜீ.எல்.பீரிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com