Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களையும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சாரும் என்று தமிழ்த் தேசியப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பணிக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி ப.ஸ்ரீதரன் மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலும் பலரை அரவணைத்து உள்வாங்கி, பலம் பெற்று ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாக அமைந்திருக்கின்றது. இது காலத்தின் கட்டாயமுமாகும். இந்நிலையில், கூட்டமைப்பு உடைந்து விடக்கூடாது.

ஆனால் இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழரசுக் கட்சியினர் சிலரும் பிரிந்து இன்னுமொரு தமிழரசுக் கட்சியை அமைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பை பிரித்தாளும் அரசியல் கத்துக்குட்டிகள் பிரித்தாண்டு வெறுப்படையச் செய்துள்ளனர் என்பதே யதார்த்தம். எனவே, கூட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும், தமிழ் அரசியல் சமூகத்தையும் ஒருமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு இரா. சம்பந்தனையும் கூட்டமைப்பை உருவாக்கியவர்களையும் சாரும்” என்றுள்ளது.

0 Responses to தமிழ்ச் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தனுக்கு உண்டு: தமிழ்த் தேசியப் பணிக்குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com