Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஆயிரக் கணக்கான பௌத்தர்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணியில் அவர்கள் அரச அலுவலகம் ஒன்றை சூறையாட முயன்ற போது வன்முறை வெடித்தது. இதனால் போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பௌத்த அமைப்பைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாகத் தகவல் அளித்த போலிசார் முதலில் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தியதாகவும் ஆனால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் இதனால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் காயம் அடைந்ததுடன் போலிசார் மீது ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் 20 இற்கும் அதிகமான போலிசார் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் தென் கிழக்குப் பகுதியிலுள்ள மைதுகுரி என்ற நகரில் அமைந்துள்ள சந்தை ஒன்ரில் புதன்கிழமை இரு தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 பேர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் 48  பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட காயம் அடைந்தவர்களில் சிலரது  நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு நைஜீரியாவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு பிண்ணனியில் இருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. மேலும் அண்மைக் காலத்தில் அங்கு நடைபெற்ற மோசமான தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்றாகவும் இது கருதப் படுகின்றது.

0 Responses to மியான்மாரின் ராக்கைன் மற்றும் நைஜீரியாவில் வன்முறை : 19 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com