Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகின் சனத்தொகை மிகுந்த நாடான சீனாவில் கடந்த பல தசாப்தங்களாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் அமுலில் இருந்தது. இதனால் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் சீனா குடும்பத்துக்கு 2 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என சட்டத்தில் சிறிது  மாற்றம் கொண்டு வந்தது.

இவ்வாறு சட்டம் தளர்த்தப் பட்ட போதும் அங்கு தற்போது குழந்தைப் பிறப்பு வீதம் வெகுவாகக் குறைந்து வருவது புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் சீன அரசு கலக்கத்தில் உள்ளது. தேசிய புள்ளியியல் துறையின் தகவல் படி 2016 ஐ விட 2017 ஆம் ஆண்டு குழந்தைப் பிறப்பு விகிதம் 18 இலட்சம் குறைவடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு முதல் சீனாவில் தொடர்ந்து 42 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தால் இதுவரை 40 கோடி பிறப்புக்கள் தடுக்கப் பட்டுள்ளதும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஒரு குழந்தைத் திட்டத்தால் சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் 2012 முதல் அங்கு தொழிலாளர் பற்றாக்குறையும் அதிகரித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீனாவில் குடும்பத்துக்கு இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என சட்டம் தளர்த்தப் பட்டது.

இவ்வாறு சட்டம் தளர்த்தப் பட்ட நிலையிலும் அங்கு பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதால் தான் சீன அரசு கலக்கம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஆரம்பம் முதற்கொண்டே சீனாவில் வாழும் பழங்குடி மக்களுக்கு இந்த சட்டம் செல்லாது என்பதுடன் கிராமங்களில் வாழும் பெற்றோருக்கு முதற் குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனாவில் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளதால் கலக்கத்தில் அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com