Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்னும் 2 கிழமைகளில் அதாவது பெப்ரவரி 4 ஆம் திகதி அளவில் பூமிக்கு அருகே உலகின் மிக உயரமான கட்டடமான பூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான அளவுடைய விண்கல் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

2002 AJ129 எனப்பெயரிடப் பட்டுள்ள் இந்த விண்கல் பூமியில் மிக வேகமான விமானத்தை விட 15 மடங்கு அதிக வேகத்தில் 67 000 mph இல் கடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியுடன் மோதினால் சில வருடங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்து குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய விண்கல்லை விட  பன் மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதாவது சில வருடங்களுக்குப் பூமியின் வெப்பநிலை குறைவடைந்து ஒரு மினி குளிர் யுகத்தை (Ice age) ஏற்படுத்த வல்லது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஆனாலும் சுமார் 1.1 Km நீளம் கொண்ட இவ்விண்கல் பூமிக்கு அருகே 4 208 641 Km தொலைவில் கடக்கவுள்ளது என்றும் இது பூமியுடன் மோதாது என்று கணிக்கப் பட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது. மேலும் நாசாவின் NEos என்ற செயற்திட்டம் பூமிக்கு அருகே வரக்கூடிய விண்கற்கல் மற்றும் வால்வெள்ளிகள் போன்றவை குறித்து உன்னிப்பாகத் தொடர்ந்து அவதானித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான விண்கல் இன்னும் 2 கிழமைகளில் பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com