ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் நேய பயணமொன்றை ஆரம்பிப்பதற்கு மக்களுடன் வீதியில் இறங்கவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொஸ்கமவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கிய பின்னரே தாம் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “2015 ஜனவரி 8ஆம் திகதி நிகழ்ந்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கு தம்முடன் இணையுமாறு முன்னாள் ஆட்சியாளர்கள் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்தக் கோரிக்கை காணாமல் போதல்களையும், ஆட்கொலைகளையும், ஊடகவியலாளர்கள் படுகொலைகளையும் மீண்டும் நிகழ்த்தக்கூடிய யுகத்தை நோக்கி நாட்டை திருப்பிச் செல்வதற்கு சமமானதல்லவா?
முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச அரங்கில் செல்வாக்கை இழந்திருக்கிறார்கள். மீண்டும் சர்வதேச சமூகத்தில் இலங்கையை நிர்க்கதி நிலைக்குத் தள்ளி எதிர்காலத்தை இருள்மயமாக்கக்கூடிய வேலைத் திட்டத்தை நோக்கி திரும்பிச் செல்வதற்கு மக்கள் தயாராக இல்லை.
பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னர் அரசியல் பேதமின்றி நாட்டை நேசிக்கும் சகல அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்து ஊழல் எதிர்ப்பு தேசிய இயக்கத்தை ஆரம்பிக்க இருக்கின்றேன். இதில் இணைந்து கொள்ளுமாறு நாட்டை நேசிக்கும் சகலருக்கும் கௌவரமான முறையில் அழைப்பு விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to மக்களுடன் இணைந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார்: ஜனாதிபதி