Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்படிருந்தால், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று வியாழக்கிழமை ஆற்றிய விசேட உரையின் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்காகவே அதிகாரத்திற்கு வந்தோம். கட்சி, நிறம், பதவி எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுற்படுத்த உயர்ந்த பட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திறைசேரி முறிகள் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நேரத்தில் இருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உயர்ந்த பட்ச ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம்.

இது தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த ஆரம்பமாகும். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மாத்திரமின்றி தற்காலத்தில் முன்வைக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். திறைசேரி முறிகள் தொடர்பான மோசடிகளுடன் தொடர்பு பட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புபட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சர் திலக் மாறப்பன தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

திறைசேரி கொடுக்கல் வாங்கலின் மூலம் பேப்பச்சுவல் றெஸறீஸ் நிறுவனம் முறைகேடான விதத்தில் தொள்ளாயிரத்து 20 கோடி ரூபாவை திரட்டியிருக்கின்றது. இலங்கை மத்திய வங்கி உரிய நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயிரத்து 200 கோடி ரூபாவை கையிருப்பில் வைத்திருக்கின்றது. இதற்காக ஆணைக்குழுவின் யோசனைகளை பின்பற்றவிருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com