சிலி நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் உலகின் மிக சக்தி வாய்ந்த ஆப்டிக்கல் தொலைக் காட்டி நிர்மாணிக்கப் பட்டு வருகின்றது. 3.2 ஜிகா பிக்ஸெல் கொண்ட இந்த தொலைக் காட்டி தான் உலகின் மிக சக்தி வாய்ந்த டிஜிட்டல் கமெராவும் ஆகும். 2022 ஆம் ஆண்டு முதல் இயங்கு நிலைக்கு வரக்கூடிய இந்தத் தொலைக் காட்டி மூலம் விண்வெளியில் வேற்றுக் கிரகவாசிகளின் அதாவது ஏலியன்களின் வேட்டை மேலும் முடுக்கி விடப் பட்டுள்ளது.
சிலியின் பாலை வனப் பகுதியில் Cerro Pachon என்ற மலையின் உச்சியில் நிர்மாணிக்கப் பட்டு வரும் LSST என்ற இந்த சக்தி வாய்ந்த தொலைக் காட்டி இயங்கத் தொடங்கிய பின்னர் ஒவ்வொரு இரவும் 800 இற்கும் அதிகமான விண்வெளி குறித்த படங்களை எடுக்கும் என்றும் விரைவில் ஒரு நாள் பிரபஞ்சத்தின் மிக ஆழமான விரிவான படத்தை இது உருவாக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த LSST தொலைக்காட்டி எடுக்கும் ஒவ்வொரு படத்துக்கும் பின் 1500 HD திறனுள்ள திரைகள் பயன்படுத்தப் படவுள்ளன. இது நிர்மாணிக்கப் பட்ட பின் விரைவில் இந்த அதிதிறன் கமெராக்கு இணையான கமெரா விண்வெளிக்குச் செலுத்தப் படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த LSST தொலைக் காட்டி இயங்கத் தொடங்கிய பின்னர் 10 வருடங்களில் 10 பில்லியன் புதிய விண்பொருட்களை இனம் காணும் எனவும் முதன் முறையாக ஒரு தொலைக் காட்டியாக இந்த LSST, பூமியிலுள்ள சனத்தொகையின் எண்ணிக்கையை விட மிக அதிக அண்டங்களை (Galaxies) அவதானிக்க உள்ளதாகவும் விண்வெளி குறித்த எண்ணற்ற தகவல்களை இது அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் LSST தொலைக் காட்டியின் பார்வைத் திறன் மனிதக் கண்களின் பார்வைத் திறனை விட 10 மில்லியன் மடங்கு பிரகாசம் வாய்ந்தது என்றும் கூறப்படுகின்றது.

0 Responses to சிலியில் நிர்மாணிக்கப் பட்டு வரும் உலகின் சக்தி வாய்ந்த தொலைக் காட்டி மற்றும் டிஜிட்டல் கமெரா