பா.ஜ.க. அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு நன்றி என்று பட்ஜெட் குறித்து காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2018 -2019ஆம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியது, “பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளதை விட நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. விவசாயத்திற்கான பட்ஜெட் என கூறுகின்றனர். ஆனால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எந்த திட்டத்தையும் பட்ஜெட்டில் காண முடியவில்லை.
ஏற்றுமதியை அதிகரிக்கும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. உலகின் பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்று கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலை. எப்படியிருப்பினும் இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு மிக்க நன்றி. நிதி பற்றாக்குறையை சமாளிப்பதில் நிதியமைச்சர் ஜெட்லி தோல்வி அடைந்துள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to பா.ஜ.க.வின் கடைசி பட்ஜெட் என்பதால் கடவுளுக்கு நன்றி: ப.சிதம்பரம்