தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடமில்லை என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “7 ஆண்டுகளுக்கு முன்பே பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், இப்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவு தான். பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பொது சொத்துகளை சேதப்படுத்தி, அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நிதிநிலைமை மோசமாக தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் நம் மாநிலத்தில் வரி குறைவாக தான் வசூலிக்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும் ஒரே சம்பளம் பெறும் நிலை ஏற்படும். தற்போது இருக்கும் நிலைமையை சீர்படுத்த வேண்டியது அரசின் கடமை.
முதலமைச்சர் என்னுடன் ஆலோசித்த பின்னர், முடிவுகளை அறிவிக்கிறார். கூட்டணி பற்றி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். 1967இல் இருந்து திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது. தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
எம்-சேன்ட் மணல் பற்றி ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் தரமானதா? என்று ஆய்வு செய்யப்படும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆணையம் இதுவரை என்னை ஆஜராக சொல்லவில்லை. அவர்கள் அழைத்தால் செல்ல தயாராக இருக்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம்