வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, மத்திய அரசாங்கம் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் திட்டங்களை ஆரம்பிக்கும் போது மாத்திரம் வடக்கு மாகாண அமைச்சர்களை அழைத்துவிட்டு, அதன்பின்னர் எந்தவித தொடர்புகளையும் பேணாது, மத்திய அரசாங்கம் புறக்கணித்துச் செயற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் போது, வடக்கு- கிழக்கிற்கு மாத்திரமின்றி எல்லா மாகாணங்களுக்கும் கூட்டாட்சி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையுடன் மத்திய அரசாங்கம் இணைந்து செயற்படுவதில்லை: சி.வி.விக்னேஸ்வரன்