Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க. செயல் தலைவரான மு.க.ஸ்டாலினால் இனி ஒருபோது முதலமைச்சராக முடியாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜயகாந்த் கூறியுள்ளதாவது,

“காவிரி விவகாரம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மு.கருணாநிதி கூட்டியிருந்தால் தான் முதல் ஆளாக பங்கு பெற்றிருப்பேன். அனைத்து ஆலோசனை கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அத்தகைய கூட்டங்களில் நாங்களும் கலந்து கொண்டு அவர் புகழ்பாட வேண்டுமா, ஸ்டாலின் என்ன கருணாநிதியா?

மு.க.ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது. எமது மனசாட்சி அவரை ஏற்றுக் கொண்டதில்லை. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என தே.மு.தி.க. விரும்பியது. எனினும், 40 தொகுதிகள் தர தி.மு.க. தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்தனைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்து இருந்தால் இப்போது நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com