Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றம் போன்ற உயர் சபைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இடம்பெறுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தங்கள் கீழ் பணியாற்றும் பெண்களிடம், பாலியல் ரீதியில் அனுகூலம் பெறுதல், சினிமா துறையில் மட்டுமே இருப்பதாக கூறமுடியாது. பாராளுமன்றம் உள்ளிட்ட பிற இடங்களிலும், இது பரவலாக அரங்கேறி வருகிறது. இது, மறுக்க முடியாத, கசப்பான உண்மை. இந்த கொடுமைக்கு எதிராக, இந்தியா துணிந்து நிற்க வேண்டும், 'நானும் இதனால் பாதிக்கப்பட்டேன்' என, பெண்கள் துணிச்சலுடன் தெரிவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் தொடர்கின்றன; ரேணுகா சவுத்ரி குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com