Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வியாழக்கிழமை அமெரிக்க செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பால் மும்மொழியப் பட்ட சிஐஏ இன் முன்னால் இயக்குனர் மைக் பொம்போயே கடுமையான போட்டிக்கு மத்தியில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

மைக் பொம்பே மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர் என்றும் முஸ்லிம்கள் மற்றும் LGBTQ எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அல்லது திருநங்கையருக்கு எதிரான உணர்வுகள் மிகுந்தவர் என்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தற்போது மைக் பொம்பே பாதுகாப்புச் செயலாளராகத் தேர்வாகி உள்ளதால் இந்த வார இறுதியில் புருஸ்ஸெல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாட்டில் அமெரிக்கக் குழுவை வழிநடத்தாவும் எதிர் வரும் மாதங்களில் வடகொரிய அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜொங் உன் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்யவும் தேவையான பொறுப்பு இவர் மீது சுமத்தப் பட்டுள்ளது.

பொம்பே இந்த கடினமான சூழலில் அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள மிகச் சிறப்பான சொத்து என டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பொம்பே அமெரிக்க செனட் சபையில் சுமார் 57-42 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்பினால் வெளியேற்றம் செய்யப் பட்ட ரெக்ஸ் டில்லர்சனின் பதவிக்குத் தற்போது பொம்பே வந்துள்ளார் என்பதுடன் இவரது தலைமைத்துவத்தில் அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்குக் கடும் அதிருப்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக சிஐஏ இயக்குனர் மைக் பொம்பேயினை நியமித்தது அமெரிக்க செனட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com