தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு தீர்வை வழங்கும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிடின், நிர்வாக முடக்கங்களை முன்னெடுப்போம் என அண்மையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்த அமைச்சர் பௌசியிடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதிக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும். அதன் பின்னர் சக்திவாய்ந்த அரசாங்கமாக மாறும். இதேவேளை, தேர்தலை நடத்துமாறு கோரும் மஹிந்த அணியினரின் யோசனை மடத்தனமானது. அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு மஹிந்த அணியினர் 2020ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் பௌசி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 2020க்குள் தேசிய அரசாங்கம் தீர்வு காணும்: ஏ.எச்.எம்.பௌசி