ஊழலுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதல் இடத்திற்கு கொண்டு வருவதை தமது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பலவீனமுற்று வீழ்ச்சியடைந்திருந்த நீதித்துறையை பலமானதாக கட்டியெழுப்பப் போவதாகவும், அரசியல் அழுத்தம் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசி அழுத்தத்திற்கிணங்க நீதிபதிகள் வழக்குத் தீர்ப்பை வழங்கும் முறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை பலப்படுத்தி புதிய திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் விசேட திறமை படைத்த அதிகாரிகளை அதற்காக இணைத்துக்கொள்ளப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை ஜெகர்த்தா மூலோபாயம் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவின் அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேசிய ரீதியிலான நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும். அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை உட்பட அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் கைகோர்த்து செயற்படவுள்ளோம். சம்பந்தப்பட்ட அமைப்புகள், நாடுகளோடு இணைந்து செயற்படுவதே எமது நோக்கமாகும்.
மேற்படி ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் சர்வதேச நாடுகளில் நடைமுறையிலுள்ள சட்டங்களிலும் குறைபாடுகள் நிலவுவதைக் காண முடிகின்றது. பாரிய ஊழல்கள் புரிந்தோர் மற்றும் குற்றவாளிகளை தேடும்போது அவர்கள் உலகின் வேறு நாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள் அத்தகையோரை இனங்கண்டு கைதுசெய்வதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்புகள் இல்லாமையினால் பெரும் பிரச்சினையாகியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் உள்ள குடிவரவு, குடியகல்வு சட்டங்கள், விஸா தொடர்பான சட்டங்கள், அந்நாடுகளில் குடியிருப்போர் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் எமக்கு பெரும் சவாலாகவுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to ஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரி