ஜீ.எஸ்.பி சலுகை இழக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாம் முழுமையாக மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்தவாறு மீண்டும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வரும் 19 பேர் தொடர்பில் மாத்திரமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை அமுல்படுத்தினால் ஜீ.எஸ்.பி சலுகையை இரத்து செய்ய நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப்பதிலளித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை யை நிறைவேற்ற அமைச்சரவை ஏகமனதாக முடிவு செய்தது. ஜி.எஸ்.பி சலுகையையோ வேறு எந்த விடயத்தையோ இழக்க நேரிட்டாலும் முன்பு அறிவித்தவாறே மரண தண்டனையை அமுல்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்.
தவறு செய்த சிறை செல்பவர்கள் அங்கு தம்மை திருத்திக் கொள்ள முயலவேண்டும்.சிறை என்பது புனர்வாழ்வு பெறும் இடம். ஆனால் போதைப் பொருள் வர்த்தகம்தொடர்பில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மீண்டும் அதே தவறை செய்தால் வெளியில் எத்தனை பேர் இறப்பார்கள். எனவே இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மாற்றம் கிடையாது.
முழுமையாக மரணதண்டனை அமுல்படுத்துவதை தான் ஏனைய நாடுகள் எதிர்க்கின்றன. போதைப் பொருள் கடத்தல்களுடன் சிறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.சிறைக்குள் இருந்து வெளியில் தொடர்பு கொண்ட 6 பேர் அண்மையில் அடையாளங் காணப்பட்டார்கள்.
மரண தண்டனை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீண்டும் விசாரணை முன்னெடுத்தால் 5,6 வருடங்கள் பிடிக்கும். ஆனால் மீண்டும் விசாரணை நடத்தாது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் அறிக்கையை பெற்று அதனை உறுதி செய்த பின்னர் தண்டனை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னெடுப்பதில் உள்ள சட்ட மற்றும் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பல தடவைகள் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to ஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவோம்: ராஜித சேனாரத்ன