Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியினுல், 12 மாணவர்கள் பயணித்ததாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுனருடன் 13 பேர் இருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to வவுனியாவில் பேருந்து விபத்து ஒரு மாணவன் பலி 11 மாணவர்கள் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com