Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘கல்வி கற்பித்தலில், வடக்கு மாகாணத்திற்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது. ஆனால், போர்க்காலமும், போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பிவிட்டது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துகொண்டு செல்ல வேண்டும்.” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும், தரம் 1 முதல் பட்டப்படிப்பு வரை, இலவசக் கல்வி முறையின் நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “அன்றைய ஆசிரியர்கள், சிறப்பான சேவைகளை ஆற்றியமையைப் போன்று, புதிய ஆசிரியர்களும் அவ்வாறு செயற்பட வேண்டும்.” என்றும் கோரியுள்ளார்.

0 Responses to வடக்கின் கல்வி வளர்ச்சியை போர்க்காலம் குழப்பிவிட்டது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com