Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்ப்பிணி பெண்கள் அவதி

பதிந்தவர்: தம்பியன் 08 September 2009

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள், பிறந்த பச்சிளம் குழந்தைகளும் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இலங்கையில் இறுதி கட்ட போர் நடந்தபோது வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். 3 மாதம் கடந்து விட்ட போதிலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இலங்கை அரசு மறுத்து வருகிறது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அகதி முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். தினமும் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பிறக்கின்றன. தடுப்பு முகாமில் உள்ள கூடாரங்களுக்குள்ளேயே அவர்கள் குழந்தை பெற்று கொள்கின்றனர். இப்படி மாதம் 400 குழந்தைகள் பிறப்பதாக இங்கு சமூக சேவை பணிகளை ஆற்றி வரும் சர்வோதய நிறுவன தலைவர் ஆரியரத்னா கூறினார்.

பிறந்த குழந்தைகளை கவனிப்பதற்காக 800 தொட்டில்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் முகாமில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்களும், பிறந்த பச்சிளம் குழந்தைகளும் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

0 Responses to கர்ப்பிணி பெண்கள் அவதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com