விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட கடந்த மே மாதப்பகுதியில் தான் சிறிலங்காவில் இல்லை என்றும் சீனாவுக்கு சென்றிருந்ததாகவும் கடைசி நேர மனித பேரவலம் அரச தலைவர் மகிந்தவின் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டது என்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தபோது தான் சிறிலங்காவில் இல்லை என்றும் விடுதலைப்புலிகள் கரைத்துரைப்பற்று உதவி அரச அதிபர் பிரிவினுள் இறுதி நேர போரில் ஈடுபட்டிருந்தபோது தான் சீனா சென்றிருந்ததாகவும் மே 10 ஆம் திகதி சென்று மே 17 ஆம் திகதியே கொழும்பு வந்ததாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் சிறுபான்மையினர் இல்லை என்று கூறுவது தவறாகும். இங்கு பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் உள்ளனர். இரு தரப்பினருமே ஒன்று சேர்ந்து இந்த நாட்டில் வாழவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது தான் சீனாவில் இருந்ததாக கூறுகிறார் பொன்சேகா