Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல் நிலமாம் வல்லை மண்ணில்
பெருமகனாம் தந்தை வேலுப்பிள்ளையோடு
தாய்மையின் வடிவமாம் பார்வதி வயிற்றில்
அவதாரமாக அவதரித்த கரிகாலனே
சூரியனைக் கைகளால் பிடிக்கும்
சுயபலம் கெண்ட வல்லவனே
தமிழ் மணக்க, மண் சீராட்ட
கார்த்திகை இருபத்தாறில் பிறந்த
எங்கள் தேசத்தின் ராஐவிளக்கின்
அகவை ஐம்பத்தைந்து

சந்திரனும் சூரியனும்
தமக்குள் புன்னகை
புரிந்தது எப்போ?
வங்கக் கடலும் வந்து வணங்கும்
வல்வையிலே - நின்
அவதாரம் கண்டபொழுதில்

நீண்டதொரு
போரட்டப் பயணத்தின்
உன்னதத்தைத்தேட
கொந்தளித்த கடலின்
ஓயாத அலைகளாகப்
புறப்பட்ட தேசத்தின்
பெரும் துயரமும்
பேரவலத்தின் மத்தியிலும்

சூரியத் தேவனின் மனமெல்லாம்
அன்பின் வழி நாடியதாலன்றோ
செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை
என்றமைத்தே
அன்பிற்கேங்கும் செல்வங்களின்
தாயுமான உன்னை
ஓடிக் களைத்த மேகமும்
காலாற நின்றே வாழ்த்துகிறது

அரிதாகக் கிடைத்த அமுதசுரபியாம்
மகரந்தப் பூந்தேவனின்
வரலாறெல்லாம்
புதுக் கவிதை மழையால்
வாழ்த்துரைக்க

வங்கக்கடலும் மேலுயர்ந்து வந்தே
அலைகளால் நீர்ப்பூச் சொரிய

அந்தி முகில்கள் விலகி நிற்க
சந்திரப் பூவோடு
நட்சத்திரங்களும் கண்சிமிட்டி வாழ்த்த

எந்த நாட்டுத் துணையுமின்றி
சொந்தக் காலில் நிற்கும் தலைவா!

இதுவரை நீ காக்கும் மௌனத்திற்கு
விடையது காணலாமென்று
ஆண்டுக்கொரு முறை பேசவரும்
உன் பேச்சின் ஆற்றலையும்
உன் மௌனங்கள் திறக்கப் போகும்
வாசல்களையும் வரவேற்கக்
காத்திருக்கும் நாளுக்காய் ஏங்கும்
பாரெல்லாம் வாழும் தமிழர்களோடு
உலகமும் உன்பக்கம் தன் பார்வையை
திசை திருப்பப் போகும் இந்நேரத்தில்

பைந்தமிழுக்குப் பாகனாய்
வந்துதித்த முழுநிலவே வாழ்க என
எம் இருதயப் பைகளுக்குள்
நிரம்பிய வார்த்தைகளுள்
தேசியத் தலைவனை வாழ்த்திட
வார்த்தைகள் இல்லாத போதும்


தமிழினத்தின் தவத்தின் பயனால்
வந்துதித்த சூரியத்தேவனே வாழ்க

எங்கள் கறுத்த இரவுகளை புலரவைத்த
விடிவெள்ளியே வாழ்க!

நிழலின்றித் தவித்த எங்களுக்கு
நிழலாய் வந்துதித்த
தேவமகனே வாழ்க
நின் புகழ் வளர்ந்தோங்க
பூரிப்புடன் வாழ்த்துகிறோம் வாழ!



தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி: தமிழ் ஈழம் தமிழ்

0 Responses to தமிழினத்தின் தவத்தின் பயனால் வந்துதித்த சூரியத்தேவனே வாழ்க....

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com