தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிபெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கருரில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து பொலிஸ்காரர் ஒருவரால், பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டதாக கூறியே அந்தப்பெண் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் அகதிகள் முகாமில் தங்கியிருந்த சாந்தகுமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 27 வயது இளம் பெண்ணின் கணவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் விசாரணைகளுக்காக சாந்தகுhரி கடந்த 7 ஆம் நாள் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது தாயாருடன் அங்கு சென்ற போதும் தாயாரை உள்ளே அனுமதிக்க மறுத்ததுடன், சாந்தகுமாரியை காவல்நிலையத்திற்குள் அழைத்து சென்ற உப பரிசோதகர் தர அதிகாரி கடுமையாக தாக்கியதுடன், கற்பழிப்பு முயற்சியையும் மேற்கொண்டிருந்தார்.
அதனை தொடர்ந்து சாந்தகுமாரி மயக்கமடைந்துவிட்டார். பின்னர் அவர் சுயநினைவு திரும்பியதும், அவரையும், அவரின் தாயாரையும் ஜீப் வண்டியில் ஏற்றி முகாம் பகுதிக்கு அண்மையாக கைவிட்டு சென்றுள்ளனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் பாதிப்படைந்த சாந்தகுமாரி தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுடிருந்தார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது குடும்ப நலன்களுக்காக தமிழ் இனத்திற்கு விரோதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் கருணாநிதி தலைமையிலான அரசு அண்மைக்காலமாக ஈழத்தமிழ் மக்கள் மீது அதிக வன்முறைகளை ஏவி வருவதாக தமிழகத் தகவல்கள் தெரிவித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.



0 Responses to தமிழக பொலிஸ் உத்தியோகத்தரால் பலாத்காரம் செய்யப்பட்ட இலங்கைப் பெண் தீக்குளிப்பு