பதிந்தவர்:
தம்பியன்
19 March 2010
புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராமையா ரவீந்திரன் என்னும் தமிழ் கைதிக்கு நேற்று சிறை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. 2000
ம் ஆண்டு தண்ணீர்த்தாங்கித் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு படுத்தி மசுகெலிய பொலிசாரினால் ரவீந்திரன் கைது செய்யப்பட்டிருந்தார். 2004
இல் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.
ரவீந்திரனின் மேல் முறைப்பாட்டில் அவரது தண்டனைக்காலம் பின்னர் 12
வருடங்களாகக் குறைக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் 2012
ரவீந்திரன் விடுதலை ஆகின்றார்.
இந்நிலையில் அவரது திருமணம் சிறையில் நேற்று காலை நடைபெற்றது.
திருமணத்திற்கு விக்கிரமபாகு கருணாரட்ண உட்பட சில பிரமுககர்கள் சமூகமளித்திருந்தனர்.
சிறை ஆணையாளரின் அனுமதி பெற்று திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to மகசீன் சிறைக்குள் தமிழ் கைதிக்கு திருமணம்