Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை திறக்கும் முயற்சிகளை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதிகளை சிறீலங்கா அரசிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் நுளைவு அனுமதி அலுவலகம் ஒன்றை திறந்துவைக்க உள்ளதாக இந்திய தூரகம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிறீலங்கா வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமாராவ் இது தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருடன் பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி வரையிலுமான தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு இந்தியாவும், சிறீலங்காவும் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை இந்திய ஏற்றுமதிஇறக்குமதி வங்கி வழங்க முன்வந்துள்ளது.

0 Responses to மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு திட்டம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com