இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இன்னர் சிற்றி பிரஸ் நிறுவனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இயங்கி வருவதாக ஊடகத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புலிகளின் பணம் பெற்றுக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு, இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் அழுத்தங்களை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்னர் சிற்றி பிரஸ் என்ற அமெரிக்க அரச சர்hபற்ற நிறுவனத்திற்கு புலி ஆதரவு அமைப்பொன்று நிதி உதவி அளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி லியான் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு



0 Responses to போர்க் குற்ற விசாரணைகளை நடத்துமாறு இன்னர் சிற்றி பிரஸ் ஊடகமே ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது: சிங்கள ஊடகம்