சிங்கள தேசம் எவ்வாறு தமிழர்களை பற்றிய புரிதலை வைத்திருக்கிறது என்பதற்கு நேரடி சாட்சியாக ஒரு அனுபவத்தை பதிவு செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த குறித்த சம்பவத்தின் மூலம் பிளவுபட்டு நிற்பது தேசங்கள் மட்டுமல்ல அத்தேசத்தில் வாழும் மக்களின் மனங்களும் தான் என்பதை புரிந்துகொள்ளலாம்.இதுபற்றி தெரியவருவதாவது
மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தென்னிலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். மூன்று நாள் பயணமாக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் கண்டி கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விமானதளத்திற்கு சென்றும் எவ்வாறு விமானங்கள் ஏறி இறங்குகிறது என பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதுவரை குண்டுவீச்சு விமானங்களை பார்த்து பயந்துபோயிருந்த இம்மாணவர்களுக்கு இது புதிய அனுபவமாகவிருந்தது.
அதன்பின்னர் மிருககாட்சி சாலைக்கு சென்றிருந்தனர். அங்கு ஒருவர் தவறவிட்ட பணப்பையை ஒரு மாணவன் கண்டெடுத்திருந்தான். அதனை உடனடியாகவே அம்மாணவர்களை வழிநடத்திச்சென்ற பாதிரியாரிடம் அம்மாணவன் கொடுத்திருந்தான். அதில் 5000 இலங்கை ரூபாக்கள் இருந்தன.
அதற்கு அடுத்தநாள் அந்தப்பணப்பை ஆனது அங்கு வேலை செய்யும் ஒரு ஊழியரினுடையது என கண்டறியப்பட்டது. அப்பணப்பையை நன்றியுடன் பெற்றுக்கொண்ட அவ் ஊழியர் அப்பணப்பையை கண்டெடுத்தது ஒரு தமிழ் மாணவன் என்பதை அறிந்து அவமானப்பட்டு போனாதாக கூறினார். நான் தமிழர் எல்லோரையும் புலிகள் என்ற வகையில் பிழையான முறையில் விளங்கிக்கொண்டிருந்ததாக கவலைப்பட்டார். தான் இதற்கு நன்றி தெரிவித்து குறித்த பாடசாலைக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.
இவ்வாறுதான் சிங்கள தேசம் தமிழர்களை பற்றிய தவறான புரிதலை கொண்டிருப்பதுடன் தமது இனம் பற்றிய மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிப்போயிருக்கிறது.



0 Responses to அவன் ஒரு தமிழன் என்பதை அறிந்து அவமானப்பட்ட சிங்கள பொதுமகன் ஒருவர்!